அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை பொது மக்களின் பொதுத் தேவைகளுக்காக வழங்குமாறு ஒலுவில் பிரதுச பொதுமகக்களினால்  இன்று கண்டன  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல்வாதிகளும், சில அரசாங்க அதிகாரிகளிலும் அங்கு வாழ்ந்து வரும் ஏழைக் குடும்பங்ளை அகற்றிவிட்டு அவர்கள்  அதனை கையகப் படுத்துவதற்கான முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக ஆா்ப்பாட்டக்காரா்கள் தெரிவித்தனா்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை கழியோடை வர்த்தக குடியிருப்பாளர்கள் மற்றும் ஒலுவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணி குடியிருப்பாளர்களும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.