bestweb

பெரசிட்டமோல்  பொய்சனிங்

Published By: Digital Desk 4

29 Jan, 2019 | 10:55 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய தாய்மார்கள் பலர் தங்களுடைய பிள்ளைகளுக்கு சுகவீனம் என்றால் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள வைத்தியர்களின் ஆலோசனையையும், சிகிச்சையையோ செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. 

பிள்ளைகளுக்கு காய்ச்சல் அடிக்கிறதா..? உடனே வீட்டில் இருக்கும் பெரசிட்டமோல் மருந்தை எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். தீர்ந்துவிட்டால் மருந்துகடைக்கு சென்று புதிய போத்தல் பெரசிட்டமோல்மருந்தை வாங்கி மீண்டும் பிள்ளைகளுக்குக் புகட்டுவர். 

இந்நிலையில் இது போல் வைத்தியர்களின் பரிந்துரையில்லாமல் பிள்ளைகளின் காய்ச்சலுக்கோ அல்லது சுகவீனத்திற்காக பெரசிட்டாமால் கொடுத்தால்,  அதன காரணமாகவே அந்த பிள்ளையின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்றும், ஆபத்தான சூழலுக்கும் அழைத்துச் சென்றுவிடும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள். இதனை பெரசிட்டமோல் பொய்சனிங் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெரசிட்டமோல் மருந்து கொடுப்பது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். 

சில குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடை மற்றும் காய்ச்சலின் தன்மை, வீரியம் ஆகியவற்றைப் பொருத்து வைத்தியர்கள் பெரசிட்டமோல் மருந்தின் அளவை நிர்ணயிப்பர். அத்துடன் குறிப்பிட்ட கால அவகாசம் வரை இடைவெளி விட்டு தான் இந்த மருந்தினை அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துவர். இதனை புறந்தள்ளி பிள்ளைகளுக்கு பெரசிட்டமோல் மருந்தைக் கொடுத்தால், அதன் காரணமாக குழந்தைகளின் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும்.

உங்களுடைய பிள்ளைகளுக்கு வைத்தியர்களின் வழிகாட்டல் இல்லாமல் பெரசிட்டமோல் கொடுத்தால் அது அவர்களுக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிடும். இதன் போது குமட்டல், வாந்தி, வயிற்று வலி,பசியின்மை, மஞ்சள் வண்ணத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் பிள்ளைகளிடம் தென்பட்டால், உடனடியாக பெரசிட்டமோல்  மருந்து வழங்குவதை நிறுத்திவிட்டு, உடனடியாக வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். 

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56