சமிந்தியா தேவிந்தி திரிமான்ன என்ற செவிப்புலனற்ற மாணவியின் எதிர்கால கலைத்திறமைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ரூபா ஒரு மில்லியன் நிதி அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.

17 வயதையுடைய சமிந்தியா தேவிந்தி திரிமான்ன என்ற மாணவி தனது திறமைகளை முழு நாட்டுக்கும் வெளிக்காட்டும் வகையில் கடந்த 20, 21 ஆம் திகதிகளில் கொழும்பு ஹோர்டன் பிலேசில் உள்ள கட்புல கலைப்பீடத்தில் நடாத்திய “மனஸ் சேயா” சித்திர கண்காட்சியை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இதன்போது அம்மாணவியின் திறமையை பாராட்டி அவருக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப இன்றைய தினம் அம்மாணவியை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்து ஜனாதிபதி அவர்கள் இந்த நிதி உதவியை வழங்கினார்.