(இராஜதுரை ஹஷான்)

வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு நிவாரனம் வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யான விடயமாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன, மலையக மக்களின் நியாயமான சம்பள விடயத்தில் எவ்வாறு துரோமமிழைக்கப்பட்டதோ அதன் தொடர்ச்சியே அனைத்து தொழிற்துறையினருக்கும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நியாயமான சம்பளத்தை கோரிய மலையக மக்களுக்கு அரசாங்கத்தினால் அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. 50 ரூபாய்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்  கடந்த கூட்டுவொப்பந்தத்தினை காட்டிலும் தற்போது 20 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடானது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினையே வெளிக்காட்டியுள்ளது. தேசிய அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு  மலையக மக்களும்  தங்களின் ஒத்துழைப்பினை வழங்கினார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறக்க கூடாது.

பொருளாதார நிலையினை  சீர்செய்ய அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்கள் குறுகிய காலத்திற்கு மாத்திரமே ஏற்புடையதாக அமையும்.பொருளாதர நெருக்கடி, அரசியல் நெருக்கடி  மற்றும் சமூக பிரச்சினைகள் ஆகியவை அனைத்திற்கும் தேர்தலின் ஊடாகவே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.