(ஆர்.விதுஷா)

ஆயுர்வேத நிலையம் என்னும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராஜகிரிய புத்கமுவ வீதி  - பகுதியில்  ஆயுர்வேத நிலையம் என்னும் போர்வையின் கீழ் விபச்சார விடுதியொன்று  இயங்கி வந்துள்ளது. 

இது தொடர்பாக வெலிகடை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவலுக்கு அமைய புதுக்கடை  இல 04 நீதவான் நீதி மன்ற அனுமதியுடன் , மேற்படி விபசார விடுதி நேற்றிரவு 10.55 மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஆண் ஒருவர் உட்பட  விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 6  பெண்கள் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.  

சந்தேக நபர்கள்  23 வயதிற்கும்  32 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய வவுனியா , ஹொகன்தர , மதகம , பலாங்கொடை , தணமல்வில பொரளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது. 

சந்தேக நபர்களை புதுக்கடை இல 04 நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வெலிகடை  பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து செல்கின்றனர்.