(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமான முறையில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள நான்கு மீனவர்களும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ் மீனவள பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.