(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் திட்டமிட்டு மாகாணசபை தேர்தலை காலதாமதமாக்கி வருகின்றது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணி மறைமுகமாக ஆதரவளித்து வருகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.