(எம்.ஆர்.எம்.வஸீம்)

முதலாளிமாரும் தொழிற்சங்கங்களும் இணைந்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளனர். சம்பளப்பிரச்சினையில் அரசாங்கம் தலையிடாததே இதற்கு காரணமாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

 தற்போது முதலாளிமாரும் தொழிற்சங்கங்களும் இணைந்து சம்பளம் அதிகரிப்பதாக தெரிவித்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளர். அரசாங்கம் ஆரம்பத்திலே தலையிட்டிருந்தால் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசாங்கம் இதில் தலையிட்டு முதலாளிமாரை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் ஒதுங்கியிருந்தது என்றார்.