இந்தியாவில்  பீகார் மாநிலத்தில் உள்ள மொசாடா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு., அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு., ஓராண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவர்கள் இருவரும் வாழ்க்கையை நடத்தி வந்த கடந்த ஓராண்டாக அந்த இளைஞரின் மனைவி ஒரு நாள் கூட குளித்தது இல்லையாம்., இதனை தனது மனைவியிடம் பல முறை அன்பாக எடுத்து கூறி குளிக்க சொல்லி வற்புறுத்தி அந்த பெண்ணிடம் காலில் விழாத குறையாக கதறியுள்ளார். இதற்க்கெல்லாம் அவர் செவிசாய்க்காமல் இருந்து வரவே., ஆத்திரமடைந்த கணவர் மனைவியை அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி., உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும்., அவரிடம் இருந்து தம்மை காக்குமாறும் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற பொலிஸார் உடனடியாக அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கண்டிக்க முயற்சித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து கண்ணீருடன், தனக்கும் தனது மனைவிக்கும் திருமணம் முடிந்து ஓராண்டு ஆகின்றது., இத்தனை நாட்களில் அவர் ஒரு நாள் கூட குளித்ததே இல்லை., இதனை பல முறை அவரிடம் கூறியும் அவர் கண்டுகொள்வதே இல்லை., அவர் மீது கடுமையான துர்நாற்றம் வீசுகிறது., எனக்கு உடனடியாக விவகாரத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி அவருடைய நடவடிக்கையை மாற்றி குளிக்க கூறி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அவரது ஒரு மாத அவகாசத்தில் நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை என்றால் பின்னர் அதற்குரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.