பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்றெளசோ பிரிட்லேன்ட் பகுதியில் இரு சகோதருக்கிடையே இடம்பெற்ற மோதலில்‍ ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி இருவருக்கிடையிலும் ஏற்பட்ட வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்தே ஒருவர் கூரிய வாள்ளொன்றினால் மற்றைய நபரை தாக்க, அவரும் பதிலுக்கு வாளினை கைப்பற்றி பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் படுகயாமடைந்த நபரின் வயிறு, கழுத்து, மற்றும் காது பகுதிகளில் கடுமையான வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்த பொகவந்தலாவை பொலிஸார் நாளைய தினம் அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.