பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.