பிரேசிலில் ஏற்பட்டுள்ள ஸிகா வைரஸ் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகளின் விற்பனை மந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்   ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில்  போட்டிக்கான ஆர்வம் பார்வையாளர் மத்தியில் ஸிகா வைரஸ் தாக்கத்தினால்  குறைவடைந்துள்ளது.

இதுவே அனுமதி சீட்டு விற்பனையில் மந்த நிலை ஏற்பட காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.