முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிலையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பணியாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில்  சமுர்த்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிலையில் பயனாளிகளின் பெயரில் கடன் பதிவு செய்யப்பட்டபோதும் உரிய பயனாளிக்கு வழங்காது. அதனை மோசடியாக கையாடல் செய்தார் என ஓர் பணியாளர்மீது மோசடி குற்றச்சாட்டு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சுமத்தப்பட்டது. 

இவ்வாறு மோசடிக்   குற்றச் சாட்டு சுமத்தப்பட்ட ஊழியர் உடனடியாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு  அவை தொடர்பான விபரங்கள் சமுர்த்தி அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் முதல் கட்ட முடிவு தற்போது மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே அனுப்பி வைக்கப்பட்டது விபரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு எழுத்தில் அறுவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே குறித்த உத்தரவின் பிரகாரம் மேற்படி உத்தியோகத்தர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.