“ஜனபதி பிரஷன்சா” விருது வழங்கும் விழா நாளை ஜனாதிபதி தலைமையில்

Published By: Vishnu

27 Jan, 2019 | 08:21 PM
image

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் “போதையிலிருந்து விடுபட்ட நாடு“ என்ற தொனிப்பொருளை வெற்றி காண்பதற்காக உயிரை பணயமாக வைத்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிக்காட்டிய பொலிஸ் அதிகாரிகளை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஜனபதி பிரஷன்சா” (ஜனாதிபதி பாராட்டு) விருது வழங்கல் விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

2015 ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள், கட்டமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய விசேட செயலணியின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 1034 பேருக்கு ஜனாதிபதி அவர்களால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மூன்று பிரிவுகளின் கீழ் பாராட்டு பதக்கங்கள் வழங்கப்படும் இந்த நிகழ்வில் 15 பேருக்கு ஜனாதிபதி பொலிஸ் வீர பதக்கங்களும் 59 பொலிஸ் திறமை பதக்கங்களும் ஏனையோருக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்பான எதிர்காலம் – மைத்திரி ஆட்சி தொனிப்பொருளின் கீழ் போதையிலிருந்து விடுதலையான நாட்டினை உருவாக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு தேசிய செயற்திட்டங்களின் கீழ் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி விரிவான பல வேலைத்திட்டங்கள் கடந்த தினங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு பிரதான நிகழ்வாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைத்திரி ஆட்சி – நிலையான நாடு கொள்ளை பிரகடனத்திற்கமைவாக போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட்ட இலங்கையை உருவாக்குவதன் ஊடாக பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியான அபிவிருத்தியை அடைவதற்குத் தேவையான பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை படிப்படியாக குறைப்பதற்கும் அவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதன் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கு நாட்டின் சுகாதார நிலையை உணர்த்துவதற்கும் உற்பத்தி வினைத்திறனை அதிகரிப்பதற்கும் வறுமையிலிருந்து விடுபடுவதற்கும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, போதைப்பொருட்களை கடத்தி செல்லுதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை 80 சதவீதமளவில் குறைப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54