(ஆர்.யசி)

ஜே.ஆர். ஜெயவர்தன எவ்வாறு தேர்தல்களை நடத்தாது காலத்தை கடத்தி தனது ஆட்சியை தக்கவைக்க நினைத்தாரோ அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட்டு மக்கள் உரிமையை பறித்து வருக்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். 

மாகாணசபை தேர்தல்களை கோரி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மாகாணசபை தேர்தலை நடத்தும் வரையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதோடு அரசாங்கத்தை  எதிர்த்து  மக்கள் எதிர்ப்பு போராட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.