(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன் பிடிக்கு இந்திய மீனவர்களால் பயன்படுத்தப்பட்டு, இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் 13 இந்திய மீனவப்படகுகள் இவ்வாறு நேற்றைய தினம் இந்திய கடற்படையினரிடம் மீள ஒப்படைத்தனர்.