ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கான சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டி நிகழ்ச்சிகள் நேற்று சனிக்கிழமைகல்கந்தவத்தை தோட்டத்தில் இடம்பெற்றன. 

இதன்போது தோட்ட முகாமையாளர் கோசல விஜேசேகர, உதவி முகாமையாளர் இஸ்சார சம்பத், தலைமை வெளிக்கள உத்தியோகத்தர்கள் விஜயன், கருப்பையா. தோட்ட வைத்திய அதிகாரி விஸ்வநாதன், தோட்ட உத்தியோகத்தர்கள், பெண் தொழிலாளர்கள்  உட்பட பலரும் போட்டி நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.