கருவிழியின் மேல் சரியாக பொருந்தாத தொடுவில்லையை கொண்டு சில நொடிகள் கூட எதையும் பார்க்க முடியாது. 

இத்தகைய நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க தானாக இயங்கும் திறனுள்ள ஒரு எல்.சி.டி தொடுவில்லையை (கான்டாக்ட் லென்ஸ்) இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தேவேஷ் மிஸ்ட்ரி வடிவமைத்து வருகின்றார்.


அதன் முதல் மாதிரியை வருகிற 2018 இல் தனது முனைவர் பட்ட ஆய்வின் முடிவிலும், வருகிற 2025 ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு தகுந்த தொடுவில்லையையும் உருவாக்கும் முயற்சில் அயராது உழைத்து வருகிறார்.