மொனராகலை - மெதகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , தான் கர்ப்பமுற்றிருப்பது குழந்தை பிறக்கும் வரையில் தனக்கு தெரியாது என குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட வயறு வலியினை தொடர்ந்து கழிவறை சென்ற போது , குழந்தை பிறந்ததாக குறித்த மாணவி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த இளைஞரொருவருடன் குறித்த மாணவி காதல் தொடர்பால்  பல முறை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர் கைது செய்யப்பட்டு , நேற்று பிபில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி மற்றும் சிசு நல்ல தேக ஆரோக்கியத்துடன் பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.