2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிபல் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 6 முறை சம்பியன் பட்டத்தை வென்றவருமான நோவக் ஜோகோவிச் பிரான்ஸ் வீரர் லுகாஸ் போலேவை எதிர்கொண்டார்.

வெறும் 83 நிமிடங்கள் நீடித்த  இந்த ஆட்டத்தில் ஜோகோவிச்  6–0, 6–2, 6–2 என்ற நேர் செட்டில் போலேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இறுதிப் போடியில் ஜோகோவிச் நடலாலை எதிர்த்தாடவுள்ளார், இவர்கள் இருவரும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 27 இல் ஜோகோவிச்சும், 25 இல் நடாலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேவேளை பெண்களுக்கான இரட்டையர் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனைகளான சமந்தா ஸ்டோசுர், சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியன் ஹங்கேரியின் டைமியா பாபோஸ் மற்றும் பிரான்ஸின்  கிறிஸ்டினா மிலாடெனோவிச் ஆகியோரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.