(பா.ருத்ரகுமார்)

தமிழ் மக்களுக்கு மட்டுமே அமைச்சர் சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக செயற்படுகின்றார். வடக்கில் வாழும் சிங்கள மக்களின் நலனை எந்த ஒரு  தமிழ் அரசியல் பிரதிநிதியும் கண்டுக்கொள்வதில்லை என பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த விகாரதிபதிகள் குற்றஞ்சுமத்தினர்.

மேலும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சர் தற்போது தேசிய நல்லிணக்கத்தைப்பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதென  தனமல்வில பியனந்தகமமே தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.