(ஆர்.விதுஷா)

மொறட்டுவை - கொரலவெல்ல  பகுதியில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணெருவர்  உயிரிழந்துள்ளார் .

குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல்  4.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.  

நபர்களுக்கிடையில்  ஏற்பட்ட கருத்த முரண்பாட்டின் காரணமாக  மேற்படி பெண் கல்லினால்  தாக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து  படுகாயமடைந்த பெண்   பாணந்துறை வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  சிகிச்சைப்பலனின்றி  உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்  48வயதுடைய  பெரேரா மாவத்தை  ,கொரலவெல்ல ,மொறட்டுவை பகுதியை சேர்ந்த லலிதா  பிரனாந்து எனப்படுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ,   பிரேத  பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான  நீதிமன்ற அனுமதியைப்பெறும் நடவடிக்கைகள்  பொலிஸாரால்  இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், கொலை  சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணெருவர் உட்பட  மூவர்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.  ஆகவே  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறட்டுவை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.