ஹங்வெல்ல இலுக்ஓவிட்ட பிரதேசத்தில் வைத்து 2009 ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியொருவரை  கடத்திச் சென்று  துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தின் இன்று குறித்த சந்தேக  நபருக்கு அவிஸ்ஸாவெல்ல உயர் நீதிமன்றத்தால்   கடுமையான வேலை பளுவுடன் கூடிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதியினால்  சந்தேக  நபருக்கு ,கடத்தல் குற்றத்திற்காகவும்  மேலும் , துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றத்திற்காகவும் முறையே  இரண்டு வருட கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் , ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன்  15 வருட கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் , 5௦௦௦ ரூபா அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் ,  சந்தேக  நபரினால் குறித்த தொகையினை  செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

கூடுதலாக , 50 ஆயிரம் ரூபா இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என சந்தேக  நபருக்கு உத்தரவிட்ட நீதவான் , அதனை செலுத்த தவறும் பட்சத்தில்  மேலும் 3 மாதங்கள் கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனைக்கு உத்தரவிட்டார்.

இவ்வழக்கில்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர் தும்மோதரை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையாவார்.