இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று

Published By: R. Kalaichelvan

26 Jan, 2019 | 10:26 AM
image

இந்தியா நாட்டின் 70ஆவது குடியரசு தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. 

இதனை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியேற்றயுள்ளார். இந்நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். 

இந்நிகழ்ச்சிக்கு முன் வருகை தந்த பிரதமர் மோடி போர் வீரர்கள் நினைவிடத்தில் (அமர் ஜவான் ஜோதி) அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்,எம்பிக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். அத்துடன்  சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பொலிசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

எனினும் விழா கொண்டாடப்படும் பகுதிகளில் அதிக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேசில் தலைநகரில் ஹெலிகொப்டர் விபத்து: 4...

2026-08-09 12:21:37
news-image

ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமெனி:...

2026-08-09 11:45:03
news-image

தாய்லாந்து பாடசாலைத் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின்...

2026-08-09 09:36:18
news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26