நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு- இந்தோனேஷியாவின் சம்பவம்

Published By: Daya

26 Jan, 2019 | 09:35 AM
image

இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

 இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில்,

 ஒரே நாளில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 400 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17