அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப - வடகொரிய தலைவர் கிம் யொங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச ட்ரம்ப், கிம் யொங் அன் ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இருநாட்டு தலைவர்கள் இடையேயான இராண்டாவது சந்திப்பு அடுத்த மாதம் பெப்ரவரி இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 உச்சி மாநாட்டுக்கான திகதி மற்றும் இடம்தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மந்திரி மைக் பாம்பியோ தலைநகர் வொஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ட்ரம்ப்-கிம் யொங் அன் இடையேயான இரண்டாவது சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கமைய,இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அடுத்த இரண்டு மாதங்களில் நடக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.