முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழில் சாலை போரின் பின்னர் இயற்காத நிலையில் தொடர்ச்சியாக காணப்பட்டு வந்துள்ளது.

பலதரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் குறித்த இடத்தினை இலங்கை பீங்கான் கூட்டுத்தானபத்திற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தனது பெயர் பலகையினை நாட்டியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இல்மனைட்களை அகழ்வது தொடர்பில் அண்மைக்கலாத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது வடக்கு மாகாணசபை ஆட்சிக்காலத்தில் நாயாறு, செம்மலைப்பகுதிகளில் கனிய மணல்கள் படிந்துள்ளன இவற்றை எடுப்பதற்கு கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்.

இன்னிலையில் இதில் தலையிட்ட வடமாகாணசபையினர் ஒரு குழு ஒன்றினை அமைத்து கடந்த 01.08.18 அன்று புல்மோட்டை பகுதிக்கு சென்று இரண்டாம் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் இதில் நாயாறு,செம்மலைப்பகுதிகளில் எடுக்கப்படும் கனிய மணல்களை ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை பகுதியில் தொழில்சாலை அமைத்து செயற்பட்டால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று அன்று முன்னாள் வடமாகாணசபை க.சிவனேசன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இல்மனையிட்டினை மூலப்பொருளாக கொண்டு ஓட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை அண்டிய பிரதேசத்தில் கனிப்பொருள் கூட்டுத்தாபனம் ஒன்றினை அமைத்து செயற்பாட மாவட்டத்தில் உள்ளவர்கள் விருப்பம் தெரிவித்தால் அனை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் கனியமணல் கூட்டுத்தாபனம் சார்பான அதிகாரிகள் அன்று தெரிவித்துள்ளார்கள்.

அதன்பின்னர் வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவு தொடர்பில் எதுவித செய்திகளும் வெளியாகாத நிலையில் தற்போது ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில் சாலையில் இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் என பெயர்பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.