இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் மீதான தடையை நீக்கியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பொலிவூட் சினிமா பட இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர்கள் இருவரும் பெண்கள் தொடர்பில் உரையாற்றுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதுடன் பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டனர்.

ஆகயைினால் பி.சி.சி.ஐ அவர்கள் இருவருக்கும் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதித்தது. இதனால் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில் இருவரும் அங்கிருந்து உடனடியாக நாடு திரும்பினார்கள்.
இதனால் அவர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுலையில் உள்ளதால் பி.சி.சி.ஐ. அவர்கள் மீதான தடையை ரத்து செய்துள்ளது.
தடை நீக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சென்று இந்திய அணியிலும், இந்தியா ‘ஏ’ அணியில் கே.எல் ராகுலும் இணையவுள்ளனர்.
ஹர்திக் பாண்டியாவை நியூசிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் இணையும்படி பி.சி.சி.ஐ. நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை நடக்கும் நியூஸிலாந்துடனான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் அவர் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை மவுண்ட் மவுங்கானுயில் 28 ஆம் திகதி இடம்பெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளது.
அதேவேளை ராகுலை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்தியா ‘ஏ’ அணியும் சேரும்படி பி.சி.சி.ஐ. கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM