பழுதான அரிசி வகைகளை வர்ணம் தீட்டி விற்பனை செய்த வர்த்தகருக்கு பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி சமிந்த கருணாதாச கடும் எச்சரிக்கை செய்து,மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார். 

இவ் அபராதப்பணம் செலுத்தத் தவறின் ஒரு மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியும் ஏற்படுமென்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஹாலி-எலைப் பகுதியின் கீரியகொல்லை என்ற இடத்தின் வர்த்தகரான டி.எம்.ஜயசேன என்பவருக்கே மேற்படி எச்சரிக்கையும்,அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹாலி-எலை சுகாதார சேவைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வலைப்பில் பாவனைக்குதவாத பழுதான அரிசி வகைகளுக்கு வர்ணம் தீட்டி கூடிய விலைக்கு அவ் அரிசியை விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.