களுவாஞ்சிகுடியில் இன்று காலை இடம்பெற்ற விவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் வீதியைக் குறுக்கறுத்துச் சென்ற அணில் குஞ்சுக்கு வழிவிடுவதற்காக சடுதியாக பிறேக் பிடித்துள்ளார்.
இந்நிலையில் செட்டிபாளையம் பகுதியிலிருந்து வயலில் பூசை செய்வதற்காக பூசைப் பொருட்களுடன் பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தானர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளும் சேதடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் பெரும் சேத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முள்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM