அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட "காயத்திரிபுரம்" வீட்டுத் திட்டம் நாளை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாசவினால் காயத்திரிபுரம் வீட்டுத் திட்டம் நாளை காலை 8.00 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

கம்உதாவ திட்டத்தின் கீழ் காயத்திரிபுரத்தில் 35 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அம்பாந்தோட்டை பந்தகிரய, தம்மென்னாவையில் நிர்மணிக்கப்பட்ட "சந்தளுகம" வீட்டுத் திட்டமும் நாளை மறுதினம் காலை 8.00 மணிக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.