நுளம்புகளின் இனப்பெருக்கத்தினை ஒழிக்கும் வகையிலான ஆண் நுளம்புகளை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் புது முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த வகை ஆண் நுளம்புகள் தீவிர இனப்பெருக்க செயல்களில் ஈடுபடும் தன்மையுடனும் ஆனால் மலடாக இருக்கும் வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்.

பெண் நுளம்புகளே, மனிதர்களை கடித்து, ரத்தத்தினை உறிஞ்சி, வியாதியையும் பரப்புகின்றன.  இந்த பெண் நுளம்புகள் வாழ்நாளில் ஒரு முறையே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.

இதனால் ஆய்வகத்தில் உற்பத்தியான மலடான ஆண் நுளம்புகள், பெண் நுளம்புகளுடன் இணை சேரும்.  ஆனால் நுளம்புகளின் இனவிருத்தி ஏற்படாது.  

எனினும், தீவிர இனப்பெருக்க தன்மையுடன் ஆனால் மலடாக இருக்கும் வகையிலான நுளம்புகளை உற்பத்தி செய்வது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.