கான் கடிகார கோபுர சுற்றுவட்டப்பகுதியில் துறைமுக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் கொழும்பு புறக்கோட்டையை சுற்றியுள்ள பாதைகளில் கடும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த போராட்டம் காரணமாக மோதரையில் இருந்து மட்டக்குளி திசைக்கு செல்லும் ரெக்லமேசன் பாதை  முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமது மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி  இப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்று இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சந்திரசிறி  மகாகமகே கூறினார்.