கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை பெய்த அடை மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 24 பேர் காணாமல் போயுள்ளனர். 

இந்தோனேஷியவான் சுலவேசி தீவின் தெற்கேயுள்ள 10 மாவட்டங்களிலேயே இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கினால் பல்வேறு இடங்களில் நில சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வீடுகள், அரசு கட்டடங்கள், பாடசாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.  

இதனால் 2 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 24 பேர் காணாமல் போயுள்ளனர். 

அத்துடன் இந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 3,321 குடும்பத்தினர் பாதிப்படைந்து உள்ளதுடன், 46 பேர் சிகிச்சைக்காக உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

இந் நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை மீட்பதற்கான பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.