ஜேர்மன் வெளி விவகார அமைச்சு, இலங்கை மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு மற்றும் செயற்திட்ட அமுல்படுத்தல் பங்காளரான Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH மற்றும் ஆதரவு பங்காளர்களான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை வலு முகாமையாளர்கள் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து, இலங்கையில் சக்தி வினைதிறனை மேம்படுத்தி, மீள்புத்தாக்க சக்தியின் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் புத்தாக்கமிக்க திட்டங்களை இனங்காணவுள்ளன. 

அவ்வினங்காணலுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படுகின்றGreen Energy Champion Sri Lanka என்ற போட்டியையும் நடாத்த திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் இலங்கை மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி பிரதி அமைச்சரான  அஜித் பீ. பெரேரா மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஜேர்மனிய தூதுவரான மேதகு கலாநிதி ஜர்கன் மோர்ஹாட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையில் சக்தி வலுவைப் பாதுகாத்தல் மற்றும் சக்தி வலு புத்தாக்கத்தை மேம்படுத்தல் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் முகமாக நாடளாவியரீதியிலான பிரசாரமொன்றை முன்னெடுப்பதே இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும். 

இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக “Green Energy Champion” செயற்திட்டத்தை இனங்காணும் போட்டி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

அத்துடன் நிலைபெறுதகு மற்றும் தூய்மையான சக்தி வலுத் தீர்வுகளுக்கு அச்செயற்திட்டம் ஒரு முன்மாதிரியாகக் கருதப்படும். வெற்றிபெறும் நுழைவிற்கு 30,000 யூரோ (அண்ணளவாக 4.7 மில்லியன் ரூபா) பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை அமுலாக்கம் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவ உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

இதன்போது ஜேர்மன் தூதுவரான மோர்ஹாட் கருத்துத் தெரிவிக்கையில்,

“மின்வலுவை நாம் உற்பத்தி செய்து, நுகருகின்ற வழிமுறையில் மாற்றத்தை அறிமுகப்படுத்துவதானது,  கட்டுப்படுத்துவதற்கான ஒரு அத்தியாவசியமான படிமுறையாக உள்ளது. 

அத்துடன், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், நிறுத்துவதற்கும் கூட  தேவையான ஒரு வழிமுறையாகவும் இது காணப்படுகின்றது. 

இலங்கையின் இயற்கை அழகினைப் பாதுகாப்பதற்கான ஒரு படிமுறையாகவும் இது இருக்கும். சக்திவலுவைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதுடன், மக்கள் தமது சமூகங்களின் நலனுக்காக புத்தாக்கமான, மீள்புத்தாக்க சக்திவலுத் திட்டங்களை முன்வைப்பதற்கும் Green Energy Champion Sri Lanka பிரசாரமானது அவர்களைத் தூண்டுமென நாம் நம்புகின்றோம்.”

இது தொடர்பாக விளக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் இப்பிரசாரத்திற்கென பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன் மூலமாக பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வீட்டில் எவ்வாறு சக்தி வலுவைச் சேமிப்பது என்பது தொடர்பான பயனுள்ள ஆலோசனைகள் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலு தொடர்பான ஏனைய பெறுமதிமிக்க தகவல்களும் இந்த இணையத்தளத்தின் மூலமாகக் கிடைக்கப் பெறுகின்றன.

சூரிய சக்தி, இயற்கை வாயு மற்றும் காற்று சக்தியைப் பயன்படுத்துவதற்கான சிறந்த சூழ்நிலைகளை இலங்கை கொண்டுள்ளது. நீர்மின்வலு ஆற்றலை இந்நாடு கிட்டத்தட்ட முற்றுமுழுதாக பயன்படுத்தி வருகிறது. 

அதனால் மின்னை உற்பத்தி செய்யும் ஏனைய மூலங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், அதிகரித்து வருகின்ற தேவைக்கேற்றவாறு சக்திவலுவின் விநியோகத்தை அதிகரிப்பதானது, செலவு மிக்க, மற்றும் அதிக நேரத்தை உள்ளெடுக்கும் விடயமாக அமைந்துள்ளது. 

மாறாக சக்திவலு வினைதிறனை மேம்படுத்துவதானது, சக்திவலுக் கட்டணங்களைக் குறைக்க உதவுவதுடன், சக்திவலுவை இறக்குமதி செய்யும் நிலைமையில் இலங்கை தங்கியிருப்பதைக் குறைத்து, ஆபத்தான பச்சைவீட்டு வாயுவான காபனீரொட்சைட் வெளியீட்டு விளைவுகளைக் குறைக்கின்றது.

உலகின் பொருளாதாரத்தில் நான்காவது பாரிய நாடான ஜேர்மனி, தற்போது தீவிர மாற்றம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது. இம்மாற்றமானது energiewende என்று அழைக்கப்படுகின்ற இச்செயற்திட்டம் ஐரோப்பிய நாட்டில் சக்தி வலு உற்பத்தித்துறையில் கணிசமான மாற்றத்தை அறிமுகப்படுத்தும் ஒரு சக்திவலு வழிமுறை மாற்றமாகும். 

ஈற்றில் அணு சக்தி, நிலக்கரி, வாயு மற்றும் ஏனைய அனைத்து மசகு எண்ணெய் வகைகள் போன்றன புதுப்பித்தக்க சக்திவலு மூலங்களால் பதிலீடு செய்யப்படும். இந்த அணுகுமுறையில் வெற்றி காண ஜேர்மனி உறுதி பூண்டுள்ளது. அந்த இலட்சிய வெற்றியை ஜேர்மனி அடைந்தால், 1990 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 2020 ஆம் ஆண்டளவில் 40 சதவீதமாகவும், 2050 ஆம் ஆண்டளவில் 80 சதவீதமாகவும் அதன் வெளியீடுகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.