(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைக்கு இலங்கையில் தளம் அமைக்க அரசாங்கம்  இடமளிப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலாக அமையாதா என ஜே.வி.பி சபையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் தெரிவித்த அரசாங்கம் உடன்படிக்கை செய்வது புதிய விடயம் இல்லை என்றது. 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இக் கேள்வியை முன்வைத்தார். 

அவர் இதன்போது கூறுகையில், 

 இதற்கு சபை  முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளிக்கையில்:- அமெரிக்காவுடன் இலங்கை அரசு பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்து கொள்வது புதிய விடயமல்ல. இதற்கு  முன்னர் இருந்த அரசுகளும் இவ்வாறான விடயங்களை செய்துள்ளன.

எனினும் உங்கள் கேள்வியை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றார்.