(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலம் திகதி முதல் செப்டம்பர் 30 வரையான காலப்பகுதிக்கான கோப் குழுவின் முதலாவது அறிக்கை இன்று அதன் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியால்  சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த அறிக்கையில் ஶ்ரீலங்கன் விமான சேவை உட்பட 18 நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் நெல் சந்தைப்படுத்தும் சபை உட்பட மேலும் பல நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் 2013 இல் அரிசி ஏற்றுமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாகவும் கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் கோப் குழு மற்றும் கணக்குக் குழு என்பவற்றிற்கு ஊடகங்களை அனுமதிக்க வேண்டும். இதற்காக  நிலையியற் கட்டளைகளை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோப்  குழுவின் தலைவரும் ஜே.வி.பி.எம்.பி.யான சுனில் ஹந்துன்னெத்தி  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.