(நா.தினுஷா) 

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு மாறாக தொடர் விளிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களினூடாக போதைபொருள் பாவணையை ஒழிக்க முடியும். இதேவேளை போதைபொருள் வியாபாரிகள் தொடர்பான தகவல்களை பெற்றுத்தருபவர்களின் தனிப்பட்ட விபரங்களை அரசாங்கம் முழுமையாக பாதுகாக்கும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். 

ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சு அகியன ஒன்றிணைந்து போதைப்பொருள் ஒழிப்புவாரத்தை பாடசாலைகளினூடாக அமுல்படுத்தி வரும் நிலையில் நாளையுடன் போதைபொருள் ஒழிப்பு வாரம் நிறைவுக்கு வருகின்றது. 

இதனை முன்னிட்டு நேற்று ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரியில் போதைபொருள் ஒழிப்பு தொடர்பான விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களான ஏமந்த பிரேமதிலக மற்றும் ஆசோகா சோனானி ஹேவாகே மற்றும் கல்வி பணிப்பாளர் ரேணுகா பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர். 

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.