(ஆர்.விதுஷா)

நிட்டம்புவ - மீவல பகுதியில் புதையல்  அகழ்வில்  ஈடுபட்ட  08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று  முற்பகல்  10.30 மணியளவில்  வீரகுல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே  சந்தேக நபர்கள்  8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளததாக பொலிசார்  தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள்   28 வயதிற்கும்   52 வயதிற்கும்  இடைப்பட்ட வயதுடைய யக்கல,கலகெடிஹேன, வெயங்கொடை  , இரத்தினபுரி  மற்றும்  உடுதத்தரிபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.  

அவர்களிடமிருந்து  கார்  , இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் , புதையல்  அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உட்பட  பூஜைப்பொருட்கள் என்பனவும் கைப்பற்றபட்டுள்ளன.  

சந்தேக நபர்களை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இன்றைய தினம் வீரகுல  பொலிசார்  மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும்  முன்னெடுத்து வரகின்றனர்.