(நா.தினுஷா) 

புதிய அரசியல் அமைப்பு யோசனை தொடர்பில் தேரர்களின் மத்தியில் தவறான கண்ணோட்டத்தினை உருவாக்குவதனூடாக அனைத்து இனமக்கள் மத்தியிலும் இனவாத பிரச்சினையை உருவாக்கி எதிர்கட்சி தலைவர் தனது தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி கொள்ளும் முயற்சிகளை  முன்னெடுத்து வருகின்றார்.

ஆகவே பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் அரசியல் அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட கூடாது என சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இராஜகிரியவில் அமைந்துள்ள சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.