(ஆர்.விதுஷா)

நாட்டின் இரு  வேறுபட்ட பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன்  இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கைகள்  நேற்று  பொரளை மற்றும் பதுளை  ஆகிய பகுதிகளில் இடம் பெற்றுள்ளதுடன், பெண்ணொருவர் உட்பட இருவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

 பொரளை பகுதியின் கல்கஹகும்புர பகுதியில் மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போது 103 கிராம் 300 மில்லிகிராம்  ஹெரோயின்  பொதைப்பொருளுடன்  பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்   32வயதடைய  இல 112 கல்கஹகும்புர , பேஸ்லையின் பாதை பொரளை பகுதியை சேர்ந்த  முஹம்திரம்கே றுக்லந்தி எனப்படும் மாயா எனப்படுபவரென விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

அத்துடன். சந்தேக நபரை   மாளிகாகந்தை நீதவான்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினர்  இன்றைய தினம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும்  முன்னனெடுத்து  வருகின்றனர். 

இதே வேளை , பதுளை பகுதியில்  நேற்று  பிற்பகல் 2.20 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  31வயதுடைய பதுளை பகுதியை சேர்ந்த  ஜயசிங்கமான  ஆராச்சிலாகே  லக்ஷித்த னுவண் ஜயசிங்க எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடமிருந்து  2கிராம் 750 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,சந்தேக நபரை  பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்றைய தினம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.