எல்ல வனப்பகுதிக்கு சென்றிருந்த வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் பத்துப் பேர் குளவிக் கொட்டு இலக்காகிய நிலையில், தெமோதரை பிரதேச அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்ல உல்லாச விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் பத்துப்பேர் உட்பட மேலும் ஐவருமாக பதினைந்து பேர் எல்ல மலை உச்சி வனப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்ததில் அதிலிருந்த குளவிகள் உல்லாசப் பிரயாணிகளை கொட்டத் தொடங்கின. குளவிக் கொட்டுதலுக்கிலக்கான வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தெமோதரை பிரதேச அரசினர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.