(ஆர்.விதுஷா)

இலங்கையின்  71 ஆவது  சுதந்திர தினத்தை  முன்னிட்டு   பல்வேறு ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வரும் நிலையில்    கொழும்பு கடற்படை பயிற்சிக்கான  அனைத்து  ஏற்பாடுகளும்  பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை  கடற்படை  தெரிவித்தள்ளது.

அந்தற்கமைய  கடற்படையினருக்கான   பயிற்சிகள்    கொழும்பை அண்மித்த  கடற்பரப்பில்  26   ஆம் திகதி  முதல்  29 அம் திகதி வரை  இடம்  பெறவுள்ளன.

இலங்கையின்  71 ஆவது  சுதந்திர  தினத்தை  முன்னிட்டு  பெப்பரவரி  மாதம்  4அம்  திகதி மேற்கொள்ளப்படவுள்ள கடற்படை அணிவகுப்பு மரியாதைக்கான  முன்னோட்டமாகவும்  இந்தப்பயிற்சிகள்  அமையவுள்ளன.  

அதற்கமைய  ,  கடலில்  குண்டுகளை பதுக்கி வைக்கப்பட்ட  பகுதிகளில் பயணித்தல்  , சேவைகளை வழங்குதல்  மற்றும்  கப்பலை  இழுத்துச் செல்லல் உள்ளிட்ட  பயிற்சிகள்  அதன்போது இடம் பெறவுள்ளன.