நீர் மின்சாரத்தின் மூலம் மட்டுமே சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்கு கூடுதலான செலவு ஏற்படுவதால், சூரிய சக்தியால் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தியும் சில குடிநீர் விநியோக திட்டங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் குடிநீர்ப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஜப்பானிய சர்வதேச அபிவிருத்தி நிதியத்தினூடாக முன்வைக்கப்பட்ட 20 புதிய குடிநீர் திட்டங்களை நிறுவுதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.