(இராஜதுரை ஹஷான்)

பொதுபல சேனா  அமைப்பின் பொதுச்  செயலார் ஞானசார தேரரை  பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார். ஆனால்   எப்போது விடுதலை செய்யப்படுவார் என்று திகதி குறிப்பிடப்படவில்லை. எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக   சிங்கள ராவய  அமைப்பின் பொதுச்செயலாளர் சுஹத தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுபல  சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரரது கைது விவகாரத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளும், ஒரு சில அரச  சார்பற்ற நிறுவனங்களுமே  உந்து  சக்தியாக காணப்பட்டன. இவரது விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் பௌத்தமத பிக்குகள் பல்வேறு  வழிமுறைகளில் போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரையில் எவ்வித பயன்களும் கிடைக்கப் பெறவில்லை.