(ஆர்.விதுஷா)

பாதாள உலகக்குழு தலைவர்   அங்கொடை லொக்காவின்  சகா என அறியப்படும் " சுரத்தல்  " எனப்படுபவர்  ஒரு கிலோகிராமிற்கும்  அதிக பெறுமதியான கேரளா கஞ்சாவுடன்  கைது  செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா  - உடமுல்லை பகுதியில் நேற்று  முற்பகல்  11 மணியளவில்   திட்டமிடப்பட்ட  குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர்.  

சந்தேக நபர்  31 வயதுடைய   இல  62-சீ , மல்கமை பாதை , முல்லேரியா பகுதியை சேர்ந்த கருகொடை ஆராச்சிலாகே அறுன சமீரப்பெரேரா எனப்படும் சுரத்தல் என அறியப்படுபவரென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

அவரிடமிருந்து 1கிலோகிராம் 15 கிராம் கேரளாகஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

அத்துடன், சந்தேக நபரை புதுக்கடை  இல 04 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் இன்றைய தினம்  மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும்முன்னெடுத்து வருகின்றனர்.