சீனாவைச் சேர்ந்த சீமெந்து உற்பத்தி நிறுவனம் , அம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாய, சர்வதேச வர்த்தக அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்தார்.

இலங்கையில் சீமெந்து உற்பத்தியாளர்கள் இருந்த போதிலும், உள்ளூர் தேவையை நிறைவேற்றக்கூடிய 55 சதவீத சீமெந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந் நிலையில் வெளிநாட்டடு சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்று இலங்கை சந்தியில் நேரடியாகப் பிரவேசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.