(எம்.மனோசித்ரா)

பேங்கொக்கிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோமாக கடத்த முற்பட்ட அலங்காரப் பறவைகள் பண்டாரநாயக்க சர்தேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

நேற்று  இரவு 10.45 மணியளவில் பேங்கொக்கிலிருந்து இலங்கையை வந்தடைந்த யூ.எல் 407 என்ற விமானத்தினூடாக வந்த இலங்கை பிரஜையே இவ்வாறு அலங்காரப் பறவைகளை கடத்த முற்பட்டுள்ளார். 

சுமார் 30 ஆயிரம் பெறுமதியான 57 பறவைகளை கூடுகளில் அடைத்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நபர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் மற்றும் விமான நிலைய சுங்க ஆணையாளர் ஆகியோரின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.