200 வருடங்கள் கடந்தும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான இலங்கை பிரஜைகள் எனும் உரிமையை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்தும் அவர்களது சந்ததியினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றே நோக்கப்படுகின்றனர்.  

தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பதற்கான உரிமை கிடைக்கின்றது. எனினும் பெரும்பான்மை மக்களோடு ஒப்பிடும்போது அவர்களுடனான சம அந்தஸ்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இன்றும் இவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே கருதப்படுகின்றனர்.

இவர்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது இலங்கையில் ஒரு அங்குல நிலத்துக்கு அவர்களால் உரிமை கூற முடியாத காரணத்தினாலேயே தோட்டத்தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நில உரிமை பெற்றுக்கொடுத்தல் இலங்கை ஜனநாயகத்தின் பிரதான பொறுப்பாகும்.

ஆகவே புதிய அரசியல் யாப்பை தாயார் செய்யும் போது இனங்களுக்கிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்பும் போது மலையக தோட்ட தொழிலாளர்களின் காணி உரிமைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பது அடிப்படை ஜனநாயக செயற்பாடாக அமைகிறது.

ஆகவே புதிய அரசியல் யாப்பு திருத்தத்தின் போது பெரும்பான்மை மக்கள் பெற்றுக்கொள்ளும் அனைத்து சலுகைகளும் உரிமைகளும் இப் பெருந்தோட்ட மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் யாப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துலக மனித பிரகடனத்தில் “நாம் எந்த இனத்தவராக, எந்த மதத்தவராக, எந்த நிறத்தவராக, எந்த நாட்டை சேர்ந்தவராக, எந்த மொழியை பேசுபவராகவும், எந்த அரசியல் பின்னணியை கொண்டவராகவும், எந்த சமூக அமைப்பை சேர்ந்தவராகவும் இருந்தாலும் சரி நாம் அனைவரும் சமமானவர்கள்” சுதந்திரமானவர்கள், சமவுடைமையானவர்கள் ஆயினும் மனித உரிமை பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தாலும் இவ்வுரிமை மலையக பெருந்தோட்ட இந்திய வம்சாவளி மக்கள் எதனையும் பெற்றக்கொள்ள முடியாதவர்களாகவே இந்த நாட்டில் வாழ்கின்றனர். 

இலங்கையின் பொருளாதாரத்தின் முன்னின்றுழைத்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்போது மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை யாப்பு திருத்தத்தின்போது இந்திய வம்சாவளி தமிழர்கள் பதிவு பிரஜையாகவே இருந்து வந்துள்ளனர். ஆகவே புதிய யாப்பில் இதனை நீக்கி எல்லோரும் இந்நாட்டு பிரஜை என திருத்தம் செய்யப்பட வேண்டும். காணி திருத்தச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு எந்த அளவு காணி வழங்கப்படுகின்றதோ? அதே அளவான காணியை பெருந்தோட்ட இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைக்க உறுதி செய்வதோடு, வயது வந்தோரின் பிள்ளைகளுக்கும் நிலத்துக்கான உரிமை கிடைக்க உறுதி செய்யப்பட வேண்டும்.

காணி உறுதிப்பத்திரம் வழங்கும்போது ஒரு குடும்பத்தின் கணவன், மனைவி இருவர் பெயரிலும் வழங்கப்பட வேண்டும். இதன்போது ஆண், பெண் சமத்துவத்தை பாதுகாக்க முடியும். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி, வீட்டு உரிமையை பாதுகாக்கப்ட வேண்டும்.

மலையக பெருந்தோட்டங்கள் கிராமங்களாக உள்வாங்கப்பட வேண்டும். இக்கிராமங்கள் வீடு, வைத்தியசாலை, பாடசாலை நலன்புரி நிலையம், விளையாட்டு மைதானம், வீதி வசதி அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமமாக உருவாக்கப்பட வேண்டும். கிராம அபிவிருத்தியானது மலையகத்திற்கு தேசிய திட்டத்தோடு இணைந்ததாக உருவாக்கப்பட வேண்டும்.

திட்டத்தை தேசிய வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்வாங்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி. வீட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட பிள்ளைகளின் கல்வி தேசிய கல்வி கொள்கையின் கீழ் கொண்டு வந்து சமனான கல்வியைப்பெற சந்தர்ப்பத்தை உருவாக்குதல் வேண்டும். முன்பள்ளி கல்வியை இலங்கை அரசாங்கத்தின் கல்வி கொள்கையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இதுவரை காலமும் முன்பள்ளிகளை நடாத்திக்கொண்டு வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலங்கை கல்வித் திட்டத்தின் கீழ் தொழில் வழங்கும் போது தற்போது செயற்பாட்டுக் கொண்டு வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

· முன்பள்ளி பாடசாலைக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வளங்கள் சமனாக கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

· இலங்கை கல்விக் கொள்கையில் தொழிநுட்பங்கள் கூடிய கல்வி கொள்கையை உருவாக்குதல் வேண்டும்

· ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை வழங்கும் போது பெருந்தோட்ட பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்

· மலையகத்திற்கு தனியார் பல்கலைக்கழகம் தேவை பெண் உரிமைகளை அரசாங்கமும் கம்பனிகளும் பாதுகாக்க வேண்டும் பெருந்தோட்ட பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கபட வேண்டும்.

மலையக பெண்களின் சுகாதார உரிமையை பெறுவதற்கான மறு உற்பத்தியை பாதுகாக்க வேண்டும். தோட்டங்களில்  மேற்கொள்ளப்படும் கட்டாய கருத்தடையை நிறுத்த வேண்டும். பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதியமானது சம்பள நிர்ணய சபையின் கீழ் கொண்டு வர வேண்டுமம். அரசாங்கத்தால் வழங்கப்படும் 2500.00 ரூபா எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மக்களின்  சம்பளத்துடன் முழுமையாக கிடைக்க வேண்டும்.

மலையகத்தில் தற்போது காணப்படும் சுகாதார துறையை அரசாங்க சுகாதார திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் 40 வீதமாக உள்வாங்கப்பட வேண்டும். பெருந்தோட்ட குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு உறுதி செய்ய வேண்டும். பெருந்தோட்ட பெண்களுக்கு தொழில் ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அரச கரும மொழியாக சிங்களமும் தமிழும் இருக்க வேண்டும். (அனைத்து இடங்களிலும் இதனை ஆவணப்படுத்தும் தமிழ், சிங்கள மொழிகளில் இருக்க வேண்டும்.)

இலங்கையில் பௌத்தம், இந்து, இஸ்லாம்  போன்ற நான்கு மதத்தவர்களுக்கும் அவர்கள் சமயத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும். வளங்கள் பகிரப்படும் போது சமனாக பேணப்பட வேண்டும். அரசாங்கம் இளைஞர்களை பாதுகாக்க வேண்டும். உதாரணம் இவர்களுக்கென தொழில் ஒன்று கிடைக்கும் வரை வாழ்வதற்கான உரிமை கிடைக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக வங்கி அரச நிதி நிறுவனங்களில் மானிய அடிப்படையில் கடன் வழங்கி ஊக்குவித்தல் வேண்டும். தொழில் வழங்கும் போது பெருந்தோட்ட இளைஞர்களுக்கு விகிதாசார அடிப்படையில் உள்வாங்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை பாதுகாப்பதும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்க வேண்டும். இலங்கை தேர்தல் முறையில் கலப்பு முறை தேவை. கல்வி, தொழில் விகிதாசாரமாக பேணப்பட வேண்டும்.

மனித உரிமைகள் சம்பந்தமான வழக்குகளை தொடர்வதற்கு தனியான நீதிமன்றம் தேவை. மலையகத்தில் பாடசாலைகளுக்கு அருகிலிருக்கும் மதுபான சாலைகளை அகற்ற வேண்டும். சிறுவர்களின் மேம்பாடு, பாதுகாப்பு போன்றவற்றை சிறுவர் உரிமை சாசனத்தில் உள்ளதைப்போன்று நடைமுறைப்படுத்தி சிறுவர்களை பாதுகாக்க வேண்டும்.

பாலியல் துஷ்பிரயோக வன்முறையை மேற்கொள்பவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கக்கூடிய வகையில் சட்டத்தை உள்வாங்கி உருவாக்கப்பட வேண்டும். அபிவிருத்தித் திட்டங்களில் பெருந்தோட்ட மக்களை பிரதேச சபையின் உள்வாங்கப்பட வேண்டும்.