அடுத்த இரு வாரங்களில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

சர்வதேச சந்தையில் பால்மாவின் விலையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளனர். 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான  விலையை அதிகரிக்குமாறு பல நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளன.

அதன்படி பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதிநிதிகள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பால்மாவிற்கான விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.